1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தற்கு வேண்டும் பொழுது.
2. பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.
3. அருவினை என்ப உளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்.
4. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்.
5. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
6. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
7. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
8. எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
9. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
10. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
திருக்குறள் அதிகாரங்கள் :
திருக்குறள் -- அன்புடைமை
திருக்குறள் -- பண்புடைமை
திருக்குறள் -- கல்வி
திருக்குறள் -- இனியவை கூறல்
திருக்குறள் -- வினைத்திட்பம்
திருக்குறள் -- பொருள்செயல்வகை
திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்
திருக்குறள் - சான்றாண்மை
திருக்குறள் - செய்நன்றி
திருக்குறள் - ஒப்புரவறிதல்
திருக்குறள் - வலி அறிதல்
திருக்குறள் - காலமறிதல்
திருக்குறள் - வாய்மை
திருக்குறள் - நட்பு
திருக்குறள் - பொறையுடைமை
திருக்குறள் - ஒழுக்கமுடைமை
திருக்குறள் - அடக்கமுடைமை
திருக்குறள் - அறிவுடைமை
திருக்குறள் - கேள்வி
திருக்குறள் -- கல்வி
No comments:
Post a Comment