திருக்குறள் -- அன்புடைமை
1. அன்பிற்கும் உண்டோ ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த உடம்பு.
4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
5. அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
6. அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
8. அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளீர்த் தற்று.
9. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
திருக்குறள் அதிகாரங்கள் :
திருக்குறள் -- அன்புடைமை
திருக்குறள் -- பண்புடைமை
திருக்குறள் -- கல்வி
திருக்குறள் -- இனியவை கூறல்
திருக்குறள் -- வினைத்திட்பம்
திருக்குறள் -- பொருள்செயல்வகை
திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்
திருக்குறள் - சான்றாண்மை
திருக்குறள் - செய்நன்றி
திருக்குறள் - ஒப்புரவறிதல்
திருக்குறள் - வலி அறிதல்
திருக்குறள் - காலமறிதல்
திருக்குறள் - வாய்மை
திருக்குறள் - நட்பு
திருக்குறள் - பொறையுடைமை
திருக்குறள் - ஒழுக்கமுடைமை
திருக்குறள் - அடக்கமுடைமை
திருக்குறள் - அறிவுடைமை
திருக்குறள் - கேள்வி
திருக்குறள் -- கல்வி
No comments:
Post a Comment